- கென்-பெட்வா இணைப்பு திட்டம் இந்தியாவின் மிக மோசமான வறட்சி-பாதிப்புக்குட்பட்ட புன்டல்கண்ட் பகுதிக்கு பாசனம் செய்ய கான்கிரீட் கால்வாய் மூலம் கென் நதியில் இருந்து பெட்வா ஆற்று பள்ளத்தாக்குக்கு உபரி நீர் கொண்டு செல்லுவதற்கானது ஆகும். இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் 230 கி.மீ. நீளம் கால்வாய் மற்றும் கென் மற்றும் பெட்வா ஆறு
- களை இணைக்கும் தடுப்பு அணைகள் மற்றும் அணைக்கட்டுகள் ஆகும். முக்கிய திட்டங்கள் Makodia மற்றும் Dhaudhan Dams ஆகும்.
- இந்த திட்டம் முடியும் போது ,இரண்டு மாநிலங்களில் உள்ள ஆறு மாவட்ட மக்களின் நீர்ப்பாசனம், குடிநீர் மற்றும் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்வதன் அடிப்படையில் திட்டமிட்டு இருப்பதால் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவற்றிற்கு இது ஒரு பல்நோக்கு திட்டம் ஆகும்.
- மத்திய பிரதேசத்தில் 3.5 லட்சம் ஹெக்டேர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 14,000 ஹெக்டேர் என பாண்டுல்கண்டு பிராந்தியத்தில் வறட்சி நிலங்கள் பாசன வசதி பெறும் .
- இது மத்திய பிரதேசத்தின் 5 மாவட்டங்களுக்கு (Chhatarpur, Raisen, Panna, Tikamgarh, Vidisha) மற்றும் உத்திரப்பிரதேச 3 மாவட்டங்கள் (மஹொபா, ஜான்சி மற்றும் பண்டா) , உள்நாட்டு மற்றும் ,தொழிற்சாலைகளுக்கு நீர் மற்றும் மின்சாரம் அளிப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.
- கென்-பெட்வா நதி இணைப்பின் திட்ட செலவு இரண்டாயிரம் கோடிகள். ஒரு திட்டத்தை செயல்படுத்த முதலில் திட்ட அறிக்கை(project report ) , சாத்திய அறிக்கை (feasibility report ) தயாரித்து அதன்பிறகு குறிப்பிட்ட மாநில அரசுகளிடம் தடையில்லா சான்றிதழ் (NOC), நிலம் கையகப்படுத்தி,பிறகு வனத்துறை ,வனவிலங்கு பாதுகாப்பு துறை ,தேசிய பசுமை தீர்ப்பாயம் ,சுற்றுச் சூழல் துறை ,மாசு கட்டுப்பாடு துறை இன்னும் பல துறைகளிடம் முறையாக அனுமதி பெற்று தான் சாதாரணமாக இது போன்ற திட்டத்தை செயல்படுத்த முடியும்.
- ஜூலை 2014 அன்று மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இந்த திட்டத்திற்கு வழக்கப்பட்டு இருந்தாலும் The National Board for Wildlife (NBWL) எனப்படும் வனவிலங்கு தேசிய வாரியம் வன பாதுகாவலர்கள் மற்றும் சுற்றுச்சூழல்வாதிகள் எதிர்ப்பை சமாளித்து அனுமதி வழங்கி உள்ளது.
- ஏறத்தாழ 8,650 ஹெக்டேர் வன நிலப்பகுதி மத்திய பிரதேசத்தில் பன்னா தேசிய பூங்காவின் பகுதி ஆகியவை இந்த திட்டத்தை செயல்படுதுவதன் காரணமாக நீரில் மூழ்கும்.
- அனைத்து துறைகளின் ஒப்புதல்களும் பெறப்பட்டு திட்டம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் இந்த வருடம் டிசம்பர்க்குள் அடிக்கல் நாட்டி துவக்கபடும் என்று இருந்த நிலையில் நீர் பங்கீடு செய்யும் ஒப்பந்தம் தொடர்பாக உத்திர பிரதேச மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் உள்ளது.
www.tnpsc trb studymaterials.com | SSLC-HSC-NEET-TNPSC-TRB-STUDY MATERIALS
Ken-Betwa Link Project | கென்-பெட்வா இணைப்பு திட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment